பெரம்பலூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-08-08 | 09:44h
update
2026-08-08 | 09:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Gram Sabha meeting to be held on Independence Day; Collector announces.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 15.08.2026 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II, சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டங்களின் செயலாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.08.2026 - 09:48:13
Privacy-Data & cookie usage: