பெரம்பலூர்: சில்லக்குடியில் கிராம சபைக் கூட்டம்; கலெக்டர் கலந்து கொண்டார்!

schedule
2025-11-01 | 17:42h
update
2025-11-13 | 15:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Grama Sabha meeting in Sillakudi; Collector attended!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக்கூட்டம் நடந்தது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சில்லக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் ந.மிருணாளினி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டார்.

Advertisement

இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் , முன்னெச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சிக்கான வரவு செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதர வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், கலெக்டர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதன் தகவலை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அனைத்து துறைகளின் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 12:59:03
Privacy-Data & cookie usage: