பெரம்பலூர்: பார் அசோசியேஷன் சார்பில் முப்பெரும் விழா!

schedule
2026-04-29 | 15:57h
update
2026-04-29 | 15:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Grand Triple Celebration Organized by the Bar Association!

பெரம்பலூர் பார் அசோசியேஷன் (கிரிமினல்) சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

பெரம்பலூர் பார் அசோசியேஷன் (கிரிமினல்) சார்பில் 36 ம் ஆண்டு தொடக்க விழா, மகிளா கோர்ட் நீதிபதி பிரிவு உபசார விழா, பெரம்பலூர் பார் அசோசியேஷன் தலைவருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பார் அசோசியேஷன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் நடந்தது. மூத்த வழக்கறிஞர் வாசுதேவன், செயலாளர் சேகர், பொருளாளர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன், மகிளா கோர்ட் நீதிபதி இந்திராணி, தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி முரளிதர கண்ணன், சார்பு நீதிபதி மோகனப்பிரியா, சட்ட உதவி ஆணைக்குழு செயலாளர் லதா, மாவட்ட உரிமையியல் கோர்ட் நீதிபதி தான்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ், குற்றவியல் நடுவர் 2 நீதிபதி கவிதா, கூடுதல் மகிளா நீதிபதி ரோஷ்மா, குன்னம் நீதித்துறை நடுவர் மற்றும் உரிமையியல் நீதிபதி ராஜசேகரன், நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சுந்தரராஜன், புகழேந்தி,சந்தானலட்சுமி, சுரேஷ்குமார், கோவிந்தராஜன், ஜான் கென்னடி, பெரம்பலூர் பார் அசோசியேஷன் (கிரிமினல்) உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணமூர்த்தி, காமராஜ், துரை.பெரியசாமி, குமாரசாமி, பேரா.முருகையன், பால்ராஜ், அய்யம்பெருமாள், கதிர்.கனகராஜ், ஸ்டாலின், சுபாஷ்சந்திரபோஸ், சின்னப்பா,பன்னீர்செல்வம், அண்ணாதுரை, எழிழரசன், திருநாவுக்கரசு, ராமசாமி, இளமைச்செல்வன், பாஸ்கர், அருண், பாடாலூர் முருகபாண்டியன், வடிவேல், அஜித்குமார், கயல்விழி, அன்பு செல்வி, சாருமதி , திவ்யா, நர்மதா, இளம் வழக்கறிஞர் வசுந்தராதேவி, உள்ளிட்ட சங்க வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 16:18:35
Privacy-Data & cookie usage: