பெரம்பலூர்: முப்படைகளில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம்; மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார்; கலெக்டர் தகவல்!

schedule
2025-06-19 | 15:56h
update
2025-06-19 | 15:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Grievance redressal camp for pensioners who served in the tri-services; Union Defense Minister Rajnath Singh to attend; Collector information!

முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆவணங்களில் பெயர் மற்றும் இதர தகவல்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், ஓய்வூதிய தொகையை திருத்துதல், ஆதார் புதுப்பிதல் என பல்வேறு பணிகளுக்காக திருச்சி ராணுவ அணி வகுப்பு மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு ஓய்வூதிய சேவைகள் 30.06.2025 அன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாமில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Advertisement

தமிழகத்தைச் சேர்ந்த முப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒப்பந்தியதாரர்கள் இம்முகாமில் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். முன்னாள் படைவீரர்கள் பணிச்சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துகொள்ள விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 88073 80165 என்ற எண்ணிற்கு வாட் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் ஓய்வூதியதாரர்களுக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும். இம்முகாமில் ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 07:26:42
Privacy-Data & cookie usage: