Perambalur : Grievances relating to the public food supply coming Sep10 on Camp
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
அதன்படி, பெரம்பலூர் வட்டம், களரம்பட்டி கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ.தேவிகாராணி தலைமையிலும்,
வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், ப.கள்ளபிரான், தலைமையிலும்,
குன்னம் வட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் தலைமையிலும்,
ஆலத்தூர் வட்டம், கொளத்தூர் கிராமத்தில் துணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம், ஆர்.கிருஷ்ணசாமி தலைமையிலும் வரும் செப்.10 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.