Perambalur: Groundnut prices have fallen; the public urges the government to reduce the prices of groundnut candy and groundnut oil, which had previously been raised.
நிலக்கடலை சத்துள்ள பருப்பு வகை மட்டுமின்றி ஏழைகளின் முந்திரி பருப்பு. புரதம் அதிகம் உள்ளதால் தென்னிந்திய உணவு வகைளில் அதிக அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக சமையலுக்கு கடலை எண்ணெயும், கால்நடைகளுக்கு புண்ணாக்கு இணை உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கடலையில் வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் ஊட்டச்சத்து உணவாக கருதப்படுவதால், சிறு குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிடுகின்றனர். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் நேரடி மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
கடந்த பல மாதங்களுக்கு முன்பு நிலக்கடலை வரத்து குறைந்து விட்டால், விலை உயர்ந்து விட்டது என கோவில்பட்டி உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த கடலைமிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்கள் 40 சதவீதம் விலையை உயர்த்தி அறிவித்தது. கடந்த சில மாதங்களாக நிலக்கடலை வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடலை பருப்பு தற்போது இன்றைய விலையாக சில்லறை விற்பனையில் கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் 125 வரையிலும், மொத்த விற்பனை சந்தைகளில் (மண்டி) ஒரு குவிண்டால் (100 கிலோ) சராசரி விலை ரூ. 5,500 முதல் ரூ.7000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், உயர்த்தப்பட்ட கடலை மிட்டாய், கடலை எண்ணெய் விலையை குறைக்க உற்பத்தியாளர் முன்வரவில்லை.
கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் உயர்த்திய 40 சதவீதத்திலிருந்து தற்போது நிலக்கடலை பருப்பு விலை நிர்ணயத்திற்கு ஏற்ப கடலை மிட்டாய், கடலை எண்ணெய் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தவெக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் இந்திய பெட்ரோல் விற்பனை செய்யும் கம்பனிகள் போல செயல்படுவதை பொதுமக்கள் விரும்பவில்லை.