பெரம்பலூர்: குரூப் 1 தேர்வு, 9 மையங்களில் செப்.27-ல் நடக்கிறது; கலெக்டர் தகவல்!

schedule
2026-09-25 | 15:10h
update
2026-09-25 | 15:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Group 1 exam to be held at 9 centers on Sept. 27; Collector announces!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் எதிர்வரும் 27.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொகுதி-1 க்கான முதல் நிலை தேர்வு முற்பகல் மட்டும் 9 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. ராமகிருஷ்ணா மகளிர் மற்றும் ஆண்கள் மெடரிக் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா வித்யா பவன், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலை கழக வளாகம், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,ஸ்ரீ சாரதா பெண்கள் கல்லூரி என மொத்தம் 9 தேர்வு மையங்களில் 2550 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுக்கு தேவையான வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்வதற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஆயுதம் தாங்கிய காவலருடன் கூடிய 2 நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப் போட்டித் தேர்வு எழுதும் நபர்கள், தேர்விற்கு காலை 9.00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 9.00 மணிக்கு பிறகு வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுதும் நபர்கள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் தேர்வாணையத்தால் தடை செய்யப்பட்ட உபகரணங்கள் எடுத்து வர அனுமதி இல்லை என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.09.2026 - 15:29:29
Privacy-Data & cookie usage: