பெரம்பலூர்: குரூப் 2 தேர்வு: 5938 நபர்கள் தேர்வெழுதினர்; கலெக்டர் நேரில் பார்வையிட்டார்!

schedule
2024-09-14 | 11:19h
update
2024-09-14 | 11:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Group 2 Exam: 5938 candidates appeared; Collector visited in person!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி 2 மற்றும் 2A தேர்வுகள் இன்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 8,046 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று 5,938 நபர்கள் தேர்வெழுதினர். விண்ணப்பித்தவர்களில் 73.79 சதவீத தேர்வர்கள் தேர்வெழுதினர். 2,108 நபர்கள் தேர்வெழுத வரவில்லை.

தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க 27 முதன்மை கண்காணிப்பாளர்களும், 3 பறக்கும் படைகளும், 11 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டு தேர்வு நடைமுறைகள் முறையாக கண்காணிக்கப்பட்டது. தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இன்று கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 05:47:41
Privacy-Data & cookie usage: