பெரம்பலூர்: குரூப் II, IIA தேர்வு: 5478 பேர் நாளை மறுநாள் எழுதுகின்றனர்; கலெக்டர் தகவல்!

schedule
2025-09-26 | 14:56h
update
2025-09-26 | 14:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Group II, IIA exam: 5478 candidates will write the day after tomorrow; Collector’s information!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. அதில், அவர் தெரிவித்ததாவது:

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் வரும் 28.09.2025 (ஞாயிற்றுக்கிழமை) குரூப்-II மற்றும் குரூப்-IIஏ க்கான போட்டித்தேர்வுகள் 18 மையங்களில் 5,478 பேர் எழுத உள்ளனர். துணை ஆட்சியர் நிலையில் 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வு எழுதும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் காலை 9.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், காலை 9.00 மணிக்கு மேல் வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுதும் நபர்கள் கைபேசி, வைஃபை மற்றும் புளூ டூத் சாதனங்கள், கால்குலேட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட தேர்வாணையத்தால் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை எடுத்து வர அனுமதியில்லை. தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று கண்காணிக்க வேண்டும், தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில சென்று வர பேருந்து வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 07:52:53
Privacy-Data & cookie usage: