பெரம்பலூர்: நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து வேட்டைக்கு சென்ற குழு; ஒருவர் கைது; 3 பேர் தப்பியோட்டம்!

schedule
2026-09-23 | 13:14h
update
2026-09-23 | 13:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Group manufactured country-made guns and went hunting; one arrested, three escaped.

பெரம்பலூர் அருகே உள்ள அனுக்கூர் – எசனை செல்லும் சாலையில், உள்ள அ.குடிக்காடு பகுதியில் இன்று காலை வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்றதாக கூறப்படும் 4 பேரை பிடிக்க முயன்றனர்.

Advertisement

இதில் வேட்டை மணி என்கிற மணிகண்டன், வழுக்கை என்கிற ராஜதுரை, செந்தில்குமார் ஆகிய 3 பேர் தப்பியோடிய நிலையில், உலகநாதன் என்பவர் பிடிபட்டார். அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரது வீடுகளில் வனத்துறையினர் நடத்திய சோதனையில், அப்போது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, அவுட்டிக் காய், துப்பாக்கி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், வெடிமருந்து உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வேட்டை மணி என்கிற மணிகண்டன் மற்றும் ஒத்த கண்ணன் என்கிற தச்சு தொழிலாளி உடன் ஆகியோரின் உதவியுடன் நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பதற்காக உலகநாதன் தனது இடத்தை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக தப்பியோடிய பேரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 13:22:35
Privacy-Data & cookie usage: