பெரம்பலூர்: சாதாரண குடும்பத்தில் இருந்து, கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க; திமுக வேட்பாளர் ஜெயலட்சுமியை வெற்றி பெற செய்யுங்கள்; கே.என். அருண்நேரு எம்.பி, பிரபாகரன் எம்.எல்.ஏ பிரச்சாரம்!

schedule
2026-04-19 | 05:32h
update
2026-04-19 | 05:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “Hailing from an ordinary family, she has reached this position through sheer hard work; ensure the victory of DMK candidate Jayalakshmi.” — Campaign by MP K.N. Arun Nehru and MLA Prabhakaran.

பெரம்பலூர் நகர திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரகாபரன் ஏற்பாட்டில் வேட்பாளர் ஜெயலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அரணாரையில் பிரச்சாரத்தில் எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் எம்.பி கே.என். அருண்நேரு ஆகியோர் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தனர். அப்போது எம்.பி அருண்நேரு பேசியதாவது:

அரணாரை வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம். போன தேர்தல்தான் இப்பதான் வந்துட்டு போன மாதிரி இருந்தது உங்ககிட்ட. அருமையான ரிசல்ட் கொடுத்து அனுப்பி வச்சிருக்கீங்க, அதுக்கு முதல்ல ஒரு நன்றியும் தெரிவிச்சு, இந்தத் தேர்தல்ல டாக்டர் ஜெயலட்சுமி நிக்கிறாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு, சாதாரண குடும்பத்துல இருந்து வந்து, இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. அது கண்டிப்பா இந்தத் தடவை நம்ம 23-ஆம் தேதி உதயசூரியன் சின்னத்துல அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பிச்சு, நம்ம ஊர்க்காரங்க, உங்களோட மக்களோட மக்களா இருந்து பழகி, படிச்சு இங்க சேவையாற்றி செஞ்சிருக்காங்க. கோவிட் (COVID) டைம்லலாம் நிறைய உதவி செஞ்சிருக்காங்க. ஒரு நல்ல வேட்பாளராகத் தலைவர் அவர்கள் அறிவிச்சு, இங்க கிட்டத்தட்ட வந்துருச்சு இன்னும் 4 நாள்தான் இருக்கு. 23-ஆம் தேதி உங்களோட பெருவாரியான ஆதரவு டாக்டர் ஜெயலட்சுமி அவர்களுக்கு வழங்கி, அவருக்கு வெற்றி வாய்ப்பைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்துல வெற்றி பெறச் செய்யுமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், என பேசினார்.
முன்னதாக பேசிய எம்.எல்.ஏ பிரபாகரன் பேசியதாவது: துணை சுகாதார நிலையம், புதிய பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், ரேசன் கடை, புதிய தார்ச் சாலைககள், இந்தப் பகுதியிலே 265 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே காவிரி கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம், 24 மணி நேரமும் குடிதண்ணீர் குடிக்கக்கூடிய வகையிலே அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறோம்.

Advertisement

அதேபோல உங்களுக்கு நல்ல பல காரியங்களையும் அடிப்படை வசதிகளையும் செய்துவிட்டுத்தான் உங்களுடைய வாக்கு சேகரிக்க வந்திருக்கிறோம். எனவே மருத்துவர் ஜெயலட்சுமி பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலே வெற்றி அடைய வேண்டும். அப்போதுதான் நமது தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் 2.0 திராவிட மாடல் ஆட்சியிலே மகளிர் உரிமைத் தொகை 1,000 என்பதை 2,000 ரூபாயாகத் தர இருக்கிறார்.

புதுமைப்பெண் திட்டத்திலே 1,000 என்பதை 1,500-ஆகத் தர இருக்கிறார். தமிழ்ப் புதல்வன் திட்டத்திலே 1,000 என்பதை 1,500-ஆகத் தர இருக்கிறார். எந்தெந்த உதவித் திட்டங்கள் இருக்கிறதோ அது அத்தனையும் இரண்டு மடங்காக உயர்த்தித் தருவதாக உங்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

இது மட்டுமா? இப்போது கூட உங்களுக்கு 5,000 ரூபாயை உங்கள் வங்கிக் கணக்கிலே செலுத்தியவர் நமது தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள். எதற்காகச் செலுத்தினார்? பிஜேபி எப்படியாவது இந்த 1,000 ரூபாயை நிறுத்த வேண்டும் என்றும் முடிவு செய்து அதை நிறுத்துவதற்கு முயற்சி செய்தது. அதைத் தெரிந்துகொண்ட தளபதி அவர்கள் 3 மாதத்திற்கான அந்த 1,000 ரூபாயும், 2,000 ரூபாய் கோடைகால நிதியுமாக 5,000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்திய அரசு திமுக அரசு.

உங்களுக்கு ஒரு காலத்துல அண்ணா திமுக ஓடாத ஃபேன்-னு, ஓடாத மிக்ஸி, ஓடாத கிரைண்டர் கொடுத்து இப்ப அது எல்லாமே காயலான் கடையில இருக்கு. உங்க வீட்ல இருக்கா? இல்லை, காயலான் கடையில இருக்கு, எங்களுக்குத் தெரியும். அதனாலதான் தலைவர் பார்த்து உங்களுக்கான சிறப்புத் திட்டமாக 8,000 ரூபாய் திட்டம் – ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி என உங்களுக்கு பிடித்த எந்தப் பொருள் வேணாலும் வாங்கிக்கலாம். அந்தப் பொருளை உங்களுக்கு இஷ்டப்பட்ட கடையில வாங்கிக்கலாம், தரமான பொருளா வாங்கிக்கலாம், அந்த 8,000 ரூபாயைப் பயன்படுத்தி வாங்கிக்கலாம்னுதான் ‘இல்லத்தரசி’ என்ற புதுமையான திட்டத்தை உங்களுக்காக வழங்கிய அரசாங்கமாக திமுக அரசாங்கம் இருக்கிறது.

எனவே மருத்துவர் ஜெயலட்சுமி அவர்களை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி பெறச் செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக என்னை 36,000 வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெறச் செய்தீர்கள். நமது அருண் நேரு எம்.பி. அவர்களை 84,000 வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி பெறச் செய்தீர்கள்.

இப்போது மருத்துவர் ஜெயலட்சுமி அவர்களை, பல்வேறு நலத்திட்டங்கள் செய்த, செய்ய இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சியிலே நமது தலைவர் அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டுமென்றால், அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் நகர 17வது வார்டு செயலாளர் அரணாரை முத்துக்குமார், நகர நிர்வாகி கல்பனா முத்துக்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி மகாதேவி ஜெயபால், மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனா அசோக்குமார், முன்னாள் அரசு வக்கீல் என். ராஜேந்திரன் என நகர, பேரூர், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வேட்பாளர் ஜெயலட்சுமி மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன். அவ்வை நகர், 4 ரோடு, தீரன் நகர், அரணாரை, கல்யாண் நகர், எம்.ஜி.ஆர் நகர், இந்திரா நகர், சமத்துவபுரம், ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கடைவீதி, தேரடி வீதி,பெரிய தெற்கு தெரு, சின்ன தெற்கு தெரு, எடத்தெரு, வள்ளலார் தெரு, செக்கடி தெரு,இந்திரா நகர், தேவாலயம் நகர், பூசாரி தெரு,தேவேந்திர குல தெரு, அருந்ததியர் தெரு, ஒட்டர் தெரு, திருநகர், மதர்சா ரோடு, பழைய பேருந்து நிலையம் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 05:43:33
Privacy-Data & cookie usage: