Perambalur: Hero Super Splendor XTEC 2.0 launched at Sivakamam Motors!
இந்தியாவின் டூவீலர் சாம்ராஜ்ஜியத்தில் முன்னணி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் பைக் குறித்து எவருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சினிமாவில் காதலுக்கு மரியாதை!, அவள் வருவாளா!! உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி கதாநாயகர்கள் காதலிகளுடன் வலம் வந்த வண்டி. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக முன்னணி ஹீரோக்களின் பைக்குகளாக மட்டுமில்லாமல் இன்று வரை இளைஞர்கள் ஸ்டைல் பைக்காக இருப்பது ஸ்பிளண்டர்.
இதன் அடுத்த கட்ட பரிணாமமாக 125 சிசி-யில் புதிய சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து இதில் புளூடூத் வசதி கொண்ட எக்ஸ் டெக் அறிமுகம் செய்யப்ட்டு அதுவும் நல்ல வரவேற்பை அனைத்து வயது தரப்பினர் இடையே பெற்றுள்ள நிலையில், இதன் மற்றொரு புதிய பரிணாமமாக எக்ஸ்டெக் 2.0 ஹீரோ மோட்டர் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
இதில் சைலண்ட் ஸ்டார்ட் மற்றும் இன்ஜின் ஆப், ஆன் வசதியையும் புதியதாக சேர்த்துள்ளது. மேலும் சி டைப் மொபைல் போன் சார்ஜ் வசதி, லிட்டர் பெட்ரோலுக்கு ARAI அறிவிப்பன்படி 75 கி.மீ மைலேஜ் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு, பவர்புல் என்ஜின், கம்போர்ட் ரைடிங் டெக்னாலாஜி, பிரிமியம் டிசைன், பெட்ரோல் சேமிக்கும் வகையில் பல அம்சங்களையும் அப்கிரேட் செய்துள்ளது. எக்ஸ் ஷோ ரூம் விலை. ரூ. 89 ஆயிரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த, சூப்பர் ஸ்ப்ளெண்டர் எக்ஸ் டெக் 2.0 என்ற புதிய பைக்கின் அறிமுக விழா பெரம்பலூர் பாலக்கரை அரு உள்ள சிவகாமம் மோட்டார்சில் நடைபெற்றது. பெரம்பலூர் கனரா பேங்க் முதன்மை மேனேஜர் சுனில் குமார் ஜா, கனரா பேங்க் சீனியர் மேனேஜர் மகேந்திரன், ஹீரோ சேல்ஸ் டி.எஸ்.எம் அருண் நாராயணன் மற்றும் டி.எஸ. ஓ பரத் செல்வகுமார், சிவகாமம் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் ராம் கணேஷ் மற்றும் துளசிதரன், மேனேஜர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அறிமுகம் செய்தனர். பின்னர், பைக்கின் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக மூத்த விற்பனை நிர்வாகி பாரதிராஜா வரவேற்றார். விற்பனை நிர்வாகி இளவரசன் சூப்பர் ஸ்பௌண்டர் எக்ஸ் டெக் 2.0 பைக்கின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். இதில், நிதி நிறுவனங்களின் மேலாளர்கள், ஹீரோ மோட்டார் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திவ்யா நன்றி கூறினார்.