பெரம்பலூர்: ஐ.ஜி காருக்கே ஏர்ஹாரன் அடித்து அலறவிட்ட அதிவேக ரேஸ் டிரைவிங் அட்டாரசிட்டி தனியார் பேருந்து பறிமுதல், 10 ஆயிரம் அபராதம் விதிப்பு!

schedule
2026-02-14 | 07:59h
update
2026-02-14 | 08:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: High-speed race driving authority seizes private bus that honked its air horn at IG’s car, fined Rs. 10,000!

பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தனியார் வாகனங்களில் அரசு விதிமுறைகளுக்கு மீறி ஒலிகளை எழுப்பும் ஏர் ஹாரன்கள், எலக்ட்ரானிக் ஹாரான்கள் வைக்கப்பட்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அலறவிடுகின்றனர். இதனால் பல விபத்துகளும் நடந்துள்ளன. பல இடங்களில் சட்டத்தில் இருந்தாலும் இது நடைமுறையில் இல்லை.

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் போலீசார் நான்கு ரோடு பாலம் அருகே வாகனங்களை வழிமறித்து அதில் உள்ள அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இன்று காலை திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்த பெரம்பலூர் – சிதம்பரம் செல்லும் KRD என்ற தனியார் பேருந்து அளவுக்கு அதிகமான க்யாமியா க்யாமியா என ஏர் ஹாரன் அடித்ததுடன் மோதும் வகையிலும் அதிவேகமாக, ரேஸ் டிரைவிங் செய்ததால் இதைக் கண்ட ஐஜி உடனடியாக அந்த அந்தப் பேருந்தின் போட்டோவை பகிர்ந்து ஏர் ஆர் ஹாரனை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கவும், பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டதுடன், திருச்சி காவல்துறை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் பேருந்துகள் லாரிகள் கார்கள் பைக்குகளில் உள்ள அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்களை பறிமுதல் போலீசாருக்கு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில், போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். பயணிகளை இறக்கி விட்ட KRD பேருந்தை பறிமுதல் செய்து பெரம்பலூர் டவுன் ஸ்டேசனனுக்கு எடுத்து சென்று போலீசார் நிறுத்தி வைத்தனர். பின்னர், அபராதம் 10 ஆயிரம் ஆன்லைனில் செலுத்திய பிறகு பேருந்து விடுவித்தவுடன், பஸ் டிரைவருக்கும், பஸ் நிர்வாகத்திற்கும் உரிய அறிவுரையும் கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 23:19:26
Privacy-Data & cookie usage: