Perambalur: Highways Department installs warning signals and solar lights to guide vehicles away from the central median.
பெரம்பலூர் புறநகரில் உள்ள பெரம்பலூர் – ஆத்தூர் சாலை மற்றும் பெரம்பலூர் – துறையூர் சாலை செஞ்சேரி பகுதிகளில் பெங்களூர் மற்றும் கரூர், நாமக்கல் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிக விபத்துக்குள்ளாகின. இதனால், பயணிகள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடந்த ஜுன்.8ம் தேதி அதிகாலை பெங்களூரில் இருந்து தஞ்சாவூர் வழியாக மன்னார்குடி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவு காரணமாக பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் ஜமாலியா நகர் பகுதியில் உள்ள சென்டர் மீடியன் சிமெண்ட் கட்டை விபத்தால் சேதமடைந்த எச்சரிக்கை சமிக்கை ஒளிரும் பலகை புதிதாக அமைக்கப்பட்டும், சூரிய ஒளியில் இயங்கும் சிவப்பு வண்ண எச்சரிக்கை விளக்கும் அமைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் முன் எச்சரிக்கையுடன் சென்டர் மீடியனை கடந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர். மேலும், வழியில் உள்ள வேகத்தடை மற்றும் சென்டர் மீடியன் முகப்பு நுழைவு பகுதியில் வெள்ளை நிற எச்சரிக்கை கோடுகளும் வரைந்துள்ளனர். வாகன ஓட்டுநர்கள் கவனமாக இயக்கி பயணிகளையும், வாகனங்களையும் பாதுகாப்காக்க தெரிவித்துள்ளனர்.