பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி : ரோவர் கல்லூரி மாணவர்கள் வெற்றி

schedule
2016-11-14 | 15:44h
update
2026-06-27 | 19:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur hockey competition at the district level: Rover college students succeed


பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் 2016-2017-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இப்போட்டிகளில் செட்டிகுளம் மற்றும் பசும்பலூர் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தந்தை ரோவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், செட்டிகுளம் மற்றும் பசும்பலூர் ஹாக்கி மன்றங்களைச் சேர்ந்த ஐந்து அணியினர் போட்டியில் கலந்து கொண்டனர்.

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியினருக்கும், பசும்பலூர் கிளப் அணியினருக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் பசும்பலூர் கிளப் அணி 2-க்கு 1 என்ற கோல் கணக்கிலும், அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் ரோவர் கல்லூரி அணி மற்றும் செட்டிக்குளம் கிளப் அணியினருக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ரோவர் கல்லூரி 5-க்கு 0 என்ற கோல் கணக்கிலும், பசும்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளி அணி மற்றும் பெரம்பலூர் ரோவர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ரோவர் அணி 2-க்கு 0 என்ற கோல்கணக்கில் வெற்றிப் பெற்றது.

Advertisement

அதனை தொடர்ந்து பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணியினருக்கும், பெரம்பலூர் ரோவர் கல்லூரி அணியினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 5-க்கு 0 என்ற கோல் கணக்கில் தந்தை ரோவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவ அணியினர் வெற்றி பெற்று முதலிடத்தையும், பசும்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொறியாளர் செந்தில் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா, டேக்வாண்டோ பயிற்றுநர் ந. தர்மராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 19:24:09
Privacy-Data & cookie usage: