பெரம்பலூர்: வீட்டு கதவுகளை உடைத்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி ரொக்கம் கொள்ளை!

schedule
2026-10-16 | 17:51h
update
2026-10-16 | 17:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: House doors broken open; gold, silver, and cash worth Rs. 8 lakh stolen!

பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த வீடுகளின் முன்பக்கக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சுமார் ரூ. 3லட்சம் மதிப்புடைய தங்கம், வெள்ளிப் பொருட்கள் ரூ. 1.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்யைடித்து சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் மகன் கண்ணன் (55). ஆசிரியாரான இவர் பள்ளிக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றிருந்த நிலையில், கதவை உடைத்து, வீட்டில் இருந்த 1 பவுன் எடையுள்ள 2 ஜோடி தங்கத் தோடுகள், வெள்ளி அரைஞாண் கொடி, வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா (32) என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அரை பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சத்தைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து தனித்தனியாக போலீசில் கொடுத் புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன், கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்கனை சேகரித்தனர்.. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர் அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இதே போல நக்கசேலத்தை சேர்ந்த பாஸ்கர் மனைவி காமாட்சி என்பவரது வீட்டில் 3 பவுன் 7 கிராம் நகையும், அதே ஊரைச் சேர்ந்த நல்லமுத்து மகன் லட்சுமணன் வீட்டில் வெள்ளி கொலுசுகளையும் களவாடி சென்றனர். இது குறித்து பெரம்பலூர் ரூரல் போலீசார் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடாலூர் மற்றும் பெரம்பலூர் ரூரல் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான கேமரா காட்சிகளை வைத்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.10.2026 - 21:09:17
Privacy-Data & cookie usage: