பெரம்பலூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் திருட்டு!

schedule
2025-12-05 | 13:05h
update
2025-12-05 | 13:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: House locked and jewelry, silver, and money stolen!

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு தில்லை நகரை சேர்த்தவர் அல்லாஹ்பக்ஸ் மகன் அமானுல்லா (54) ஜாஃபின் பானு என்ற மனைவியும் ஹர்ஷத் (22) ஆஷிக்(20) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்
அமனுல்லா கடந்த 7 வருடமாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் கீழக்கல்பூண்டிக்கு கடந்த (28.11.25) தேதியன்று தனது மனைவி ஜாஃபின் பானுவுடன் சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் மூத்த மகன் ஹர்ஷத் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் வீட்டிற்கு துணி மாற்றுவதற்காக வந்துவிட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் அருகில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் பால் வாங்க வரும் போது அமானுல்லா வீட்டின் வெளிப்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து அமானுல்லாவிற்கு தகவல் தெரிவித்தவுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதைத்தொடர்ந்து அமானுல்லா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து நெக்லஸ், தோடு, மோதிரங்கள், டாலர் சைடு தோடு என மொத்தம்-13 பவுன் தங்க நகைகளும்,
பிரேஸ்லெட், கொலுசு, அரைஞான் கயிறு, மெட்டி என வெள்ளிப் பொருட்களும், வெளிநாட்டு பணம் (800 திர்ஹாம்) இந்திய மதிப்பு ரூ. 19,000 ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது

இதையடுத்து அமானுல்லா பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தடய அறிவியல் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 17:20:09
Privacy-Data & cookie usage: