பெரம்பலூர்: பருவ மழைக் காலத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரியம் அறிவிப்பு!!

schedule
2025-09-24 | 19:28h
update
2025-09-25 | 06:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: How to avoid electrical accidents during the monsoon season? Electricity Board announcement!!

மின் பாதையின் மின் கம்பி அறுந்து கிடந்தால், பொது மக்கள் எவரும் அதனை தொடாமலும் அருகில் செல்லாமலும், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையிலிருந்தாலோ, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின் கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ, பொது மக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மின் வாரியத்தைச் சாராத நபர்கள் எவரும் மின் தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது.

மின் தடை ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரியப் பணியாளர் மூலம் மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகில் மின்பாதை/மின்கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதனருகில் செல்லாமலும், மின் பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும். டிராக்டர் மற்றும் லாரியில் சுரும்பு போன்றவற்றை அளவுக்கதிகமாக ஏற்றி செல்லும் போது அருகில் உள்ள மின்பாதை/மின்கம்பிகளை உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் வீடு/கட்டிடம் கட்டும்போது மின்பாதையிலிருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மின்பாதையின் அருகில் செல்லாமலும் மின்பாதையை தொடாமலும் பணியினை செய்ய வேண்டும்.

Advertisement

பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும் போது தரமான வயரிங் சாமான்களை சாமான்களை உபயோகித்தும் முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்யுமாறும், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க் தவிர்க்கும் பொருட்டு Earth Leakage Circuit Breaker பொருத்துமாறும், பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தினை தவிர்க்கும்படியும், பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு முதலிய விலங்கினங்களை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணியினை மேற்கொள்ளும்போது மின் இணைப்பை மின் நிறுத்தம் செய்து, மீண்டும் உறுதிபடுத்திய பிறகு பணியை கவனமாக செய்யுமாறும்,
வனத்துறையின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக மின்சாரத்தினை திருடி வயல்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மில்வேலி அமைப்பவர்களின் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மின்னிணைப்பிலிருந்து மின்சாரம் திருடப்பட்டு மின்வேலி அமைக்கப்படுகிறதோ அந்த மின் இணைப்பு மின்துண்டிப்பு செய்யப்படும். வழக்கின் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

உதவிக்கு மின்னகம் சேவை மையத்தினை 9498794987 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தால் விரைந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்களுக்கு தெரிவித்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 20:34:08
Privacy-Data & cookie usage: