பெரம்பலூர்: 14 வயதுள்ள சிறுமிகளுக்கு ஹெச்.பி.வி தடுப்பூசி; கலெக்டர் தகவல்!

schedule
2026-09-24 | 16:41h
update
2026-09-24 | 17:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: HPV vaccine for 14-year-old girls; Collector announces!

AI – IMAGE – HPV Vaccine Model

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தமிழ் நாட்டில் அதிகம் பாதித்த மாவட்டங்களில் நமது பெரம்பலூர் மாவட்டம் 2வது இடத்தில் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்துறை முன்னாள் அமைச்சர் சிவசங்கரால் 27.01.2026 அன்று தொடங்கப்பட்டு முதல் கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 98 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 14 வயதான 2,574 மாணவிகளுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணியாக தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 14 வயது நிறைவடைந்து 15 வயது நிறைவடையாத பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதலுடன் ஒரு தவணை ஹெச்.பி.வி தடுப்பூசி இலவசமாக அரசு சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே, தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளில் எந்தவிதமான பக்க விளைவுகளும் பதிவாகவில்லை. தடுப்பூசி பாதுகாப்பானது என்பதுடன் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ ரீதியாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹெச்.பி.வி தொற்று, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். சரியான வயதில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் தொற்று தொடர்பான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதில் முக்கிய பங்காற்ற முடியும்.

இத்திட்டத்தின் மூலம், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பெரம்பலூர் மாவட்டத்தில் 3796 தகுதியுடைய பெண் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த முக்கியமான சுகாதார முயற்சியின் மூலம் கிடைக்கும் அரிய வாய்ப்பினை பெற்றோர் / பாதுகாவலர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது தகுதியுடைய பெண் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும். தடுப்பூசி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அருகிலுள்ளஅரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களைஅணுகலாம். இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.09.2026 - 17:08:48
Privacy-Data & cookie usage: