பெரம்பலூர்: கோடை மழையில் நனைந்து நூற்றுக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்!

schedule
2026-04-05 | 15:12h
update
2026-04-05 | 15:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Hundreds of Paddy Sacks Damaged by Summer Rains!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அரும்பாவூர் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தானிய கிடங்கு இயங்கி வருகிறது இங்கு அரும்பாவூர், பூலாம்பாடி, மலையாளபட்டி தழுதாழை, அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விளையக்கூடிய நெல்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் பல்லாயிரம் டன் அளவுள்ள நெல் பயிர்களை கோடைகாலத்தில் பாதுகாப்பு இல்லாமல் வைத்ததன் விளைவாக நேற்று திடீரென பெய்த மழையில் நெல் மூட்டைகள் அனைத்தும் மழை நீரில் நனைந்து சேதமானது. இதனைத் தொடர்ந்து செய்வதறியாமல் இருந்த அதிகாரிகள் நெல் மூட்டைகளை பிரித்து அதில் உள்ள நெல்மணிகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதும் அதிக ஈரப்பதம் கொண்டுள்ள நெல்மணிகள் விரைவில் முளைக்கும் என கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் வீணாகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 14:10:14
Privacy-Data & cookie usage: