பெரம்பலூர்: வீட்டில் நகைகளை கொள்ளையடித்த கணவன்

மனைவி கைது!

schedule
2025-06-16 | 19:39h
update
2025-06-17 | 19:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Husband and wife arrested for stealing jewelry from home!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சில்லக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் இவரது மனைவி ஜானகி (வயது 40). கடந்த 9 ம் தேதி சம்பவத்தன்று இவர் தனது வீட்டு கதவை பூட்டி விட்டு சாவியை கதவின் மேல் வைத்துவிட்டு, அந்த ஊர் திருவிழாவில் நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மகனுடன் சென்றார். பின்னர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10.3/4 பவுன் நகை காணாமல் போய் இருப்பது . தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குன்னம் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாா் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பல்வேறு கோணங்களில் நடத்தியதில் .விசாரணையில் திம்மூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் பெரியசாமி (29), அவரது மனைவி அழகுராணி (23) இருவரும், சில்லக்குடியை சேர்ந்த ஜானகி வீட்டில் நகை, திருடியவர்கள் என்பதும் உறுதியானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்நு திருடிய 10.3/4 பவுன் நகைகளை பறிமுதல் செய்ததோடு, இருவரையும் குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். விரைவாக காணாத போன நகைகளை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த குன்னம் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.06.2026 - 03:30:29
Privacy-Data & cookie usage: