பெரம்பலூர்: மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; அபராதம்!

schedule
2026-10-08 | 16:12h
update
2026-10-08 | 16:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Husband sentenced to life imprisonment and fined for murdering his wife.

பெரம்பலூர் அருகே குடிக்க பணம் தர மறுத்த மனைவியை குத்தி கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனையும், அவரது மகளையும் கொலை செய்ய முயன்ற வழக்கில் 10 ஆண்டு சிறையும் 21 ஆயிரம் அபராதத்தையும் விதித்து இன்று மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

பெரம்பலூர் மாவட்டம், தொண்டமாந்துறையை சேர்ந்தவர் ராஜ் மகன் தங்கவேலு (50). கொத்தனார். 2025 ஆண்டு பிப்.16ல் குடிப்பதற்கு பணம் தராததால் ஏற்பட்ட குடும்ப சண்டையில், மனைவி மாரியம்மாள் (48) என்பவரை கத்தியால் குத்தி தங்கவேலு கொலை செய்தார். இதனை தடுக்க வந்த மகள் கவிதா (30) என்பவரையும் முதுகில் குத்தினார். மகள் கவிதா அளித்தப் புகாரில் தங்கவேலுவை செய்த அரும்பாவூர் போலீசார் 39/25 u/s 296 (b), 103 (1) ,109(1) BNS பிரிவுகளின் கீழ் கொலை, கொலை முயற்சி, ஆபாசமாக திட்டுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற மன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று BNS எனப்படும் பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரிவுகளின்கீழ் தங்கவேலு தனது மனைவி மாரியம்மாவை கத்தியால் குத்தி கொன்றதற்காக ஆயள்தண்டனை, 10ஆயிரம் ஆபராதமும், மகள் கவிதாவை கொலை செய்ய முயன்றதற்காக 10ஆண்டு சிறை தண்டனையுடன் 10 ஆயிரம் அபராதமும், மேலும் பொது இடத்தில் அசிங்கமாக திட்டியதற்கும், நடத்தைக்கும் 3 மாதம் சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி (முழு கூடுதல் பொறுப்பு) ஆனந்தன் தீர்ப்பு விதித்தார். நீதிமன்ற உத்தரப்படி குற்றவாளி தங்கவேலுவை சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.10.2026 - 16:38:27
Privacy-Data & cookie usage: