பெரம்பலூர்: பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்: தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் பேட்டி!

schedule
2026-05-05 | 07:52h
update
2026-05-05 | 08:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “I Will Fulfill the Basic Amenities of the Public” — TVK MLA Sivakumar Interview!

பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சிவக்குமாருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மிருணாளினி முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். பின்னர், சிவக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி தலைவர் விஜய்- க்கு பொதுமக்கள் அமோகமாக ஆதரவு அளித்துள்ளனர். இந்த வெற்றியை எதிர்த்தேன். அதேபோல் வெற்றி பெற்றுள்ளேன். பெரம்பலூர் தொகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன் தெரிவித்தார். பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர் சிவக்குமாருக்கு அரசு அலுவலர்களும், கட்சியினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தவெகே வேட்பாளர் சிவக்குமார் 28 சுற்றுகளில் 89776 வாக்குகளும், 1106 தபால் வாக்குகளும் என மொத்தம் 90882 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.டி. ஜெயலட்சுமியை விட 14393 வாக்குகள் அதிகம் பெற்றார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2026 - 08:41:40
Privacy-Data & cookie usage: