Perambalur: “I will win the Kunnam constituency by a margin of 50,000 votes,” says TVK candidate Revathi in an interview.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக ரேவதி முத்தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன், குன்னம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்ற அவர், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ரேவதி அளித்த பேட்டி: இந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அமைச்சர் சிவசங்கர் தொகுதி பக்கமே செல்லவில்லை, மக்களுக்கு சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை நலத்திட்டங்களையும் செய்யவில்லை, அதனை முன் நிறுத்தியும், இந்த பகுதியில் உள்ள மக்காச்சோளம் மற்றும் பருத்தி விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் ஆலை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதிகளை முன் வைத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
தவெக மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம், பேரூர் கிளைக் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.