பெரம்பலூர்: NDA கூட்டணியில் இரட்டை இலையில் குன்னம் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் சரண்யா!

schedule
2026-03-28 | 16:43h
update
2026-04-25 | 22:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: IJK candidate Saranya to contest the Kunnam constituency under the ‘Two Leaves’ symbol as part of the NDA alliance.

பெரம்பலூர்: குன்னம் தொகுதி வேட்பாளராக , வரகூரை சேர்ந்தவரும் இந்திய ஜனநாயக கட்சி குன்னம் சட்டமன்றத் தொகுதி தலைவராகவும் உள்ள M.D. அன்பழகனின் மனைவி சரண்யா (37). அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சி மைக்ரோ பயாலஜி, பி.எட் பட்டம் பெற்றுள்ளார்.

Advertisement

இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மாவட்டத்தில் பாரிவேந்தரால் தொடங்கப்பட்ட கட்சி என்பதுடன், பெரம்பலூர் மாவட்டத்தில் அக்கட்சி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியில் குன்னம் தொகுதி வேட்பாளர் சரண்யா அன்பழகன் இரட்டை இலை சின்னத்தில், அமைச்சர் சிவசங்கரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

ஐஜேகே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரண்யாவிற்கு, ஐஜேகே மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த அதிமுக, பாஜக, பாமக, தாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்று காலை பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், அதிமுக வேட்பாளருமாக தமிழச்செல்வனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தேஜ கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2026 - 22:13:06
Privacy-Data & cookie usage: