பெரம்பலூர்: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் வாக்குகள் சேகரித்த குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளர் சரண்யா! ஊர்கள்தோறும் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!!

schedule
2026-04-10 | 16:43h
update
2026-04-10 | 16:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: IJK candidate Saranya who collected votes from 100 day work program workers! Aarti is held in every Village and enthusiastically welcomed!!

தேசிய ஜனநாயக கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சி, குன்னம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. குன்னம் சட்டமன்றத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக சரண்யா அன்பழகன் தொகுதி முழுவதும் சூறாவளி பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் குன்னம் சட்டமன்ற தொகுதி, வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பனங்கூர், மருவத்தூர், பேரளி, எறையூர் பாதை, சித்தளி, அசூர், ஆய்க்குடி, எழுமூர், மழவராயன் நல்லூர், காருகுடி, வைத்தியநாதபுரம், ஆண்டிக்குரும்பலூர், சின்னபரவாய், பரவாய், சமத்துவபுரம், கல்லம்புதூர், கிளியூர், அந்தூர், வரகூர் உள்ளிட்ட பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் வேட்பாளர் சரண்யா தனது கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் சரண்யா அன்பழகனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் பூக்கள் தூவையும் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் திரண்டு இருந்த பொதுமக்களிடையே சரண்யா அன்பழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் குன்னம் தொகுதியில் உள்ள மக்களின் குறைகளை உடனடியாக தீர்ப்பேன். அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என தெரிவித்தார்.

Advertisement

வேட்பாளர் சரண்யா இன்று அசூர் பகுதிக்கு வாக்கு சேகரிக்க செல்லும் வழியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாகஉயர்த்துவது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள வாக்குறுதியை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். அதிமுக, அமமுக, தமாகா, பாமக, பாஜக, ஐஜேகே, உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 17:25:50
Privacy-Data & cookie usage: