பெரம்பலூர்: போக்சோ வழக்கில், குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை அபராதம்; உடந்தையாக இருந்த தாய்க்கு 5 ஆண்டு சிறை அபராதம்!

schedule
2025-01-04 | 15:00h
update
2025-01-04 | 15:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: In POCSO case, the accused was sentenced to 6 years in prison; the mother, who was an accomplice, was sentenced to 5 years in prison!

கடந்த 2020 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், குற்றவாளிகள் இருவரில் ஒருவருக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையோடு. ரூ. 11 ஆயிரம் அபராதத்தையும், உடந்தையாக இருந்த தாய்க்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அரும்பாவூர், கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் தனராஜ் (37) என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதற்கு அச்சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக அச்சிறுமி அரும்பாவூர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்து, தனராஜ் மற்றும் சிறுமியின் தாயாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளிகளான தனராஜிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதத்தையும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி தீர்ப்பு விதித்து உத்தரவிட்டார்.

வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கோர்ட் ஏட்டு ஜீவிதா ஆகியோரை எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 21:17:22
Privacy-Data & cookie usage: