பெரம்பலூர்: வெவ்வேறு சம்பவங்களில், ஒரு இளம்பெண், திருமணமாகி 2 மாதமே ஆன புதுப்பெண் உள்பட 4 பெண்கள் தற்கொலை!

schedule
2024-06-16 | 15:40h
update
2024-06-16 | 15:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: In separate incidents, 4 women, including a young woman, a newly wed girl who has been married for 2 months, have committed suicide!

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று வெவ்வேறு சம்பவங்களிலும், குடும்ப பிரச்சனைளிலும் 4 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமாகி 2 மாதமே ஆன புதுப்பெண் :

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா குருவம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் கீர்த்தனாவிற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து.

இந்நிலையில், நேற்று முன்தினம் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை தனது கணவருடன் சொந்த ஊரான அடைக்கம்பட்டி கிராமத்திற்கு வந்தார். நேற்று தனது கணவர் நாகேந்திரன் அவரது சொந்த ஊரான குருவம்பட்டிக்கு சென்று விட்டார்.

நேற்றிரவு கீர்த்தனா தனது கணவருக்கு செல்போனில் பேசிய அவர், தனது பெற்றோர்கள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நிலையில், கணவர் நாகேந்திரனை அடைக்கம்பட்டிக்கு அழைத்தாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கீர்த்தனா தூக்கு போட்டுக் கொள்வேன் என வீடியோ காலில் வந்து மிரட்டிய நிலையில், உடனடியாக நாகேந்திரன் அவரது மாமனார் செல்வராஜுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக வீட்டிற்கு கீர்த்தனாவை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.

Advertisement

இதையடுத்து செல்வராஜ் தனது வீட்டில் வந்து பார்த்தபோது கீர்த்தனா சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கீர்த்தனாவிற்கு திருமணமாகி 2 மாதங்ள் ஆன நிலையில் இறந்ததால், சார் ஆட்சியர் கோகுல் மற்றும் பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


குடும்பத் தகராறு: 2 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை!

குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்த இரண்டு பெண்கள் இன்று உயிரிழந்தனர். சிறுகன்பூர் அருகே உள்ள நத்தக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி தனலட்சுமி (55). இவர் குடும்ப தகராறு காரணமாக இன்று விஷம் குடித்தார். உடனடியாக அவரை பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.

இதே போல டி.களத்தூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவ கந்தசாமி மனைவி மணிமேகலை (24). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையில் இருந்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில், தாய் செல்வராணியும், அப்பாவை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தையுடன் வசித்து வந்த மணிமேகலை சனிக்கிழமை இரவு செடிகளுக்கு அடிக்கும் விஷத்தை அருந்தினார்.

உடனடியாக, அங்கிருந்தவர், துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை அளித்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிந்த இரு பெண்கள் குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு பெண்

வேப்பூர் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி அன்னக்கிளி (50), விஷம் அருந்தி மயங்கி கிடந்தவரை அங்கிருந்தவர் உடனடியாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிசிச்சைகயின் போது பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வயிற்று வலியால் விஷம் அருந்தி தற்கொலை முயன்றாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் இன்று ஒரே 2 இளம்பெண்கள் உள்பட 4 பெண்கள் இறந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.08.2026 - 17:40:51
Privacy-Data & cookie usage: