பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் கணக்காளர் பணி : ஆட்சியர் அறிவிப்பு

schedule
2018-04-11 | 17:37h
update
2026-07-05 | 08:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur In the District Child Protection Unit accountant: Collector Announcement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர் (ஒரு பணியிடம்) பணியிடத்திற்கு ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் கணக்காளர்ர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து, வணிகவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணக்குத்துறையில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 01.04.2018 அன்று 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். கணக்காளர் பணியிடத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.14,000- (ரூபாய் பதினான்காயிரம் மட்டும்) தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.perambalur.tn.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 26.04.2018 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 08:08:58
Privacy-Data & cookie usage: