Perambalur In the school students to begin today’s innovative science exhibition

schedule
2016-07-14 | 10:39h
update
2026-06-27 | 18:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur In the school students to begin today’s innovative science exhibition

பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தாக்க அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் CBSE மெட்ரிக் பள்ளியில் 2015-16ஆம் கல்வி ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் கண்காட்சியை இன்று (14.07.2016) மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் நேரில் பார்வையிட்டார்.

Advertisement

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் ஆண்டுதோறும் தொடர்ந்து அறிவியல் கண்காட்சியை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ – மாணவிகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் விதமாக நடைபெற்ற புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் 121 மாணவ – மாணவியர்களின் காட்சி மாதிரி இயக்கி காண்பிக்கப்பட்டன.

அறிவியல் தொழிற்நுட்ப மாதிரி தயாரித்து காட்சிக்கு வைக்கப்படுவதற்காக, மேற்கண்ட 121 மாணவ – மாணவியர்களுக்கும், சென்னை-25 அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் மூலம் நேரடி பயன்பாட்டின் கீழ் வங்கி வழியாக தலா ரூ.5000- அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் காட்சிக்கு வைக்கப்பட காட்சி மாதிரிகளை கண்டு மாணவர்களின் படைபாற்றல் திறனை பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, கோல்டன் கேட்ஸ் பள்ளித் தாளாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 18:57:50
Privacy-Data & cookie usage: