பெரம்பலூர்: மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தகவல் தொழில் நுட்ப உதவியாளர் பணி; கலெக்டர் தகவல்!

schedule
2025-09-23 | 14:06h
update
2025-09-23 | 14:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Information Technology Assistant post in the District Social Welfare and Women’s Rights Department; Collector information!

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மத்திய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் (District Hub For Empowerment Of Women) ஒரு காலிப்பணியிடம் தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் (IT Assistant for Mission Shakti) ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு விண்ணபிக்க தேவையான தகுதிகள்: இளங்கலை பட்டப்படிப்பு கணினி (ம) ஐடி துறையில் படித்திருக்க வேண்டும் மற்றும் அரசு மற்றும் அரசு சார பணியில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட இணையதள முகவரி https://perambalur.nic.in யில் பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம் எண்.9 தரைத்தளம் மாவட்ட ஆட்சியர் வளாகம் பெரம்பலூர் மாவட்டம் அஞ்சல்-621212 என்ற முகவரியில் 10.10.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை நேரில் சமர்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.05.2026 - 19:35:31
Privacy-Data & cookie usage: