பெரம்பலூர்: தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து கூட்டுக்குழு தலைமையில் ஆய்வு!

schedule
2026-05-23 | 11:48h
update
2026-05-23 | 11:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Inspection of Safety Measures in Private School Vehicles Led by Joint Committee!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்களை வருடாந்திர தணிக்கை செய்திடும் கூட்டாய்வு கலெக்டர் மிருணாளினி, போலீஸ் எஸ்.பி பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisement

பள்ளி பேருந்துகளில் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள், தீ தடுப்பு உபகரணங்கள், அவசரகால வழி கதவுகள், சிசிடிவி கேமராக்கள், நல்ல நிலையில் இயங்குகின்றதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

. அவசர காலங்களில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினரின் உதவியைப் பெற அவசர கால எண் 112 தொடர்பு கொள்ள வேண்டும். முறையான வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, பணி அனுபவம் உள்ளவர்களையே பள்ளி நிர்வாகம் பணிக்கு அமர்த்த வேண்டும்.

வாகன பதிவேடு பராமரிக்கவும், ஓட்டுநர்கள் பள்ளி நிர்வாகத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் அணிந்துதான் வாகனத்தை இயக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனங்களை முறையாக பராமரிக்காத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் .

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 65 பள்ளிகளைச் சேர்ந்த 460 பேருந்துகளில், முதற்கட்ட ஆய்வில் 250 பேருந்துகளும், வரும் நாட்களில் மீதமுள்ள வாகனங்களும் இன்னும் ஒரிரு நாளைக்குள் முறையாக ஆய்வு செய்யப்படும். விதிகளுக்கு உட்பட்டு அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது,

முன்னதாக, தீ விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் எவ்வாறு தீயை முறையாக அணைப்பது, பள்ளி பேருந்துகளில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது, 108 அவசரகால ஊர்தியின் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து தீயணைப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.டி.ஓ அனிதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவ, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன், பெரம்பலூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.05.2026 - 12:09:50
Privacy-Data & cookie usage: