பெரம்பலூர்: ஓட்டுப் போட மலேசியாவில் இருந்து இந்தியா வந்த பன்னாட்டு தொழில் அதிபர் டத்தோ பிரகதீஸ்குமார்!

schedule
2026-04-23 | 09:01h
update
2026-04-23 | 09:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: International Businessman Dato. S. Prakadeeshkumar Arrives in India from Malaysia to Cast His Vote!

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார். மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், லண்டன், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் தனது தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நடைபெறும் நாடாளு மன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் ஆகிய எந்த தேர்தல் நடந்தாலும் தனது சொந்த கிராமமான பூலாம்பாடி வந்து வாக்களிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக, மலேசியாவில் இருந்து நேற்றிரவு பூலாம்பாடி வந்த டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமார். பூலாம்பாடி அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

Advertisement

சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு, வாக்களிக்காமல் இருக்கும் சிலர் இருக்கும் நிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் பன்னாட்டு தொழிலபதிர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சொந்த ஊருக்கு, மலேசியாவில் இருந்து செலவு செய்து வாக்களித்திருப்பது, பொதுமக்களை வாக்களிக்க உற்சாகப்படுத்தியது. அதோடு, பொதுமக்கள் தொழிலதிபர் எஸ்.பிரகதீஸ்குமாரை பலரும் பாராட்டினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 09:03:08
Privacy-Data & cookie usage: