பெரம்பலூர்: வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உலக யோகா தின விழா!

schedule
2026-06-21 | 05:13h
update
2026-06-21 | 05:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: International Yoga Day celebration at Valikandapuram Government Higher Secondary School!

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமையில் நடந்தது. உதவித் தலைமை ஆசிரியர்கள் வீரையன், ராதிகா, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மனவளக்கலை மன்ற பேராசிரியர் சுந்தர் தலைமையில் பேராசிரியர்கள் நிஷா, கீதா துணைப் பேராசிரியர்கள் மகாலட்சுமி, புவனா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு யோகப் பயிற்சியின் முக்கியத்துவம், வேதாத்திரி மகரிஷி அருளிய எளிய உடற்பயிற்சிகள், உடலைப் பேணும் வழிமுறைகள் குறித்தும், திரிகோண ஆசனம், தடாசனம், வஜ்ராசனம், சர்வங்காசனம் உள்ளிட்ட ஆசனங்கள் மாணவர்களுக்குக் கற்றுத் தந்தனர். இவற்றினால் ஏற்படும் பயன்கனையும் எடுத்துரைத்தனர். முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி யோகப் பயிற்சிகள் மூலம் நினைவாற்றலைப் பெருக்கிப் படிப்பில் சிறந்து விளங்க முடியும் என விளக்கி பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சத்தியசீலன் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.06.2026 - 05:47:29
Privacy-Data & cookie usage: