பெரம்பலூர்: விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் அறிமுக விழா! ஏராளமான கட்சி பிரமுகர்கள் வாழ்த்து!

schedule
2026-01-06 | 16:43h
update
2026-01-06 | 17:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Introduction ceremony of the district VCK secretary Krishnakumar! Numerous party functionaries offered their congratulations!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி) மாவட்ட செயலாளராக ந.கிருஷ்ணகுமாரை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாகவளன் அறிவித்தார். அதன்படி, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அஸ்வின் பார்ட்டி ஹாலில் புதிய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் அ.இ.அழகுமுத்து ஆகிய பொறுப்பாளர்களின் அறிமுக கூட்டம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மகச. ரத்தினவேல், தமிழ்மாணிக்கம் ஆகியோர் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அஸ்வின் பார்டி ஹாலில் நடந்தது.

மண்டலச் செயலாளர் வக்கீல் ஸ்டாலின், மண்டலச் துணைச் செயலாளர், பெ.லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பார்களாக, மாநில செயலாளர் வீரசெங்கோலன், முன்னாள் மண்டல செயலாளர் ஜெ.தங்கதுரை, மேலிட பொறுப்பாளர் ரா.கிட்டு, நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் மன்னர் மன்னன், மு.போ.மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தமிழ் குமரன், கல்வி பொருளாதார விழிப்புணர்வு அணி அண்ணாதுரை, மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வாம்பாள், சிறப்பு விருந்தினர்களாக திருச்சி புல்லட் லாரன்ஸ், திருச்சி அன்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

மேலும், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் வெற்றியழகன், இடி முழக்கம், பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர்கள் பிச்சைப்பிள்ளை, ஆலத்தூர் ஒருங்கிணைப்பாளர்கள், பாடாலூர் ரவிக்குமார், நாட்டார்மங்கலம் தயாளன், நகரச் செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான சண்முகசுந்தரம், தழுதாழை பாலு, மாவட்ட அமைப்பாளர்கள், முரசொலி, வழக்கறிஞர் அருண், வழக்கறிஞர் அய்யம்பெருமாள், வழக்கறிஞர் மணிமாறன், மற்றும் எசனை ரவி, காமராஜ், கிராபிக்ஸ் டிசைனர் புதுநடுவலூர் சக்தி, சோமண்டாபுதூர் பச்சமுத்து மேலும் கட்சியின் கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பெரம்பலூர் தொகுதியை கூட்டணி சார்பில் விசிகவிற்கு ஒதுக்க கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட செயலாளர் சிறப்பாக பணிபுரிந்து கட்சியின் வளர்ச்சிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கும் பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து சால்வை அணிவித்து பாராட்டினர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக ஏற்புரையில் பேசிய மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் பதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், அனைவரும் நல்ல ஒத்துழைப்பை வழங்கி வேண்டும் என்றும், தலைவர் தொல்.திருமாவளவன் பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார். சரியான, தூக்கம், சாப்பாடு இல்லாமல், எல்லோர் மீது அன்பு செலுத்துகிறார். இந்த சமூகம் அரசியல்படுத்தப்படாததால் எல்லா சுமைகளையும் அவரே சுமந்து கொண்டு செல்கிறார். இந்த இயக்திற்கு வந்த போது, 23 வயதில் மத்திய அரசின் ஒப்பந்ததாரர். இந்த இயக்கத்திற்கு சம்பாதிக்க வரவில்லை. அரக்கோணம் பகுதியில் தலைவரின் பேச்சால் இந்த இயக்கத்திற்கு வந்தேன். பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும் நினைத்திருந்தால் வேறொரு இயக்கத்திற்கு சென்றிருப்பேன். மாவட்ட செயலாளர் ரத்தினவேல் நல்ல செயற்பாட்டாளர். அவருக்கும், எவருக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் கிடையாது. தலைவர் எங்கள் குலதெய்வம் என பேசினார். எனக்கு பதவிதான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது நான் பழகுவதில் யாரிடம் மாற்றம் செய்து கொள்ளவில்லை. அனைத்து மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுவேன். எனது தாழ்மையான வேண்டுகோள் என்வென்றால், இக்கட்சிக்கு ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் தான் கட்சியின் மிகப்பெரிய பலம். நான் ஒன்றிய செயலாளராக இருந்துள்ளேன். தலைவர் எனக்கு வேலை செய்ய அனுப்பி உள்ளார். அவரின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். நான் யாருடைய அணியும் அல்ல, தலைவர் எழுச்சி தமிழரின் அணி என பேசினார். அனைவருக்கும் அனைத்து ஒத்துழைப்பு வழங்குங்கள், நானும் கட்சி வளர்ச்சிக்கு அனைத்து ஒத்துழைப்பு வழங்குவேன் என தலைவர் இட்ட பணிகளை நிறைவேற்ற அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்க இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன் என பேசினார். முன்னதாக, கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை, மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2026 - 02:22:24
Privacy-Data & cookie usage: