ஐ.ஓ.பி வங்கியின் ஆடம்பர நகைத் தயாரித்தல் இலவச பயிற்சி

schedule
2016-02-06 | 16:42h
update
2026-04-22 | 21:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் வெளியிட்ட அறிக்கை :

மையத்தில் 2016ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கான ‘’ஆடம்பர நகைத் தாயாரித்தல்’’ பயிற்சி இலவசமாக அளிக்கப் படுகிறது.

இதற்கு உண்டான தகுதி, வயது 18க்கு மேல் மற்றும் 40க்கு குறைவாக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 8ஆம் வகுப்பு படித்தவராகஇருத்தல் வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

இந்தப் பயிற்சி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில்அனைத்து விதமான ’செயற்கை ஆபரணம்’ செய்வதற்கு சிறந்த முறையில் பயிற்சிஅளிக்கப்படும். பயிற்சிநேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன்
இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி., வங்கியின் முதல் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதிஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, வாக்காளர்அடையாள அட்டை, ஆதார் அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ்அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புமாறு பிப்ரவரி மாதம் 12ம் தேதிக்குள்அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
12ந் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது தொலைப்பேசி
மூலமாகவோ தொடர்புக் கொள்ளவும்.

பயிற்சி மையத்தின் முகவரி: IOB RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE, ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்குப் பேட்டை, பெரம்பலூர்.
தொலைபேசி எண் : 04328 277896

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 21:22:11
Privacy-Data & cookie usage: