ஐ.ஓ.பி (வங்கி) சார்பில் மகளிருக்கான கட்டணமில்லா தையற்கலை பயிற்சி

schedule
2016-10-25 | 14:05h
update
2026-06-24 | 08:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur IOB (bank) on behalf of the toll-free tailoring training for women

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் வெளியிட்ட அறிக்கை :

பயிற்சி மையத்தில், 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி (02.11.2016) முதல் தையல் கலை பயிற்சி இலவசமாக அளிக்கபட உள்ளது. இதற்கு உண்டான தகுதி, வயது 18க்கு மேல் மற்றும் 40க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

இந்த பயிற்சி தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் அனைத்து விதமான தையல் கலைகள் சிறந்த முறையில் அளிக்கப்படும். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் மதியஉணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

பயிற்சிபெற விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் மாதம் 1ம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு அன்று பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் முதல்மாடியில் உள்ள ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

அத்துடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு மற்றும் 1 ஸ்டாம்ப் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்கவும். நவம்பர் மாதம் 1ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்கு பேருந்து நிறுத்தம் பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 08:54:00
Privacy-Data & cookie usage: