பூத்தையல் வேலைப்பாடு இலவச தொழில் பயிற்சி!
Perambalur: IOB RSETI — Free Vocational Training for Women in Embroidery and Floral Stitching!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான எம்பிராய்டரி & ஃபேப்ரிக் ஓவியம் ( பூத்தையல் வேலைப்பாடு ) இலவச தொழில் பயிற்சி வரும் 20.05.2026 முதல் அளிக்கப்பட உள்ளது.
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 31 நாட்கள் நடக்கும். பயிற்சிக்கான உபகரணங்கள், சீருடை, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு, பொருளாதார உதவி பெற சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும்.
இப்பயிற்சியில் சேர, 19 வயதுக்கு மேல் மற்றும் 50 வயதுக்கு குறைவாகவும் எழுத படிக்க தெரிந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். ஆதார், ரேஷன் கார்டு, பேங் பாஸ்புக் நகல், சாதி சான்றிதழ் / மாற்று சான்றிதழ், பான் அட்டை, வறுமைக்கோடு சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோவுடன் இணைத்து 18-05-2026 முதல் எளம்பலூர் சாலை, சுப்ரமணியம் வளாகத்தில் அமைந்துள்ள IOB வங்கியின் முதல் தளத்தில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி (RSETI) மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், மேலும் விவரங்களுக்கு, ஐஓபி, கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ், எளம்பலூர் சாலை, பெரம்பலூர் 621212,என்ற முகவரியிலோ அல்லது 8489065899/ 9488840328 தொலைப்பேசி மூலமாக அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மையத்தின் இயக்குநர் வி.முருகையன் தெரிவித்துள்ளார்.