பெரம்பலூர்: அரசலூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு; 556 காளைகள் பங்கேற்பு; 45 வீரர்கள் காயம்!

schedule
2026-02-15 | 14:12h
update
2026-02-15 | 14:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Jallikattu in Arasalur village; 556 bulls participate; 45 athletes injured!

பெரம்பலூர் மாவட்டம், அரசலூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கலெக்டர் ந.மிருணாளினி இன்று தொடங்கி வைத்தார்.

Advertisement

பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 556 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 304 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் அடக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் சார்பில் சிறப்பு பரிசுகளை வழங்கினர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சுமார் 2,000 க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். 45 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வருவாய் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை மருத்துவர்கள, காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர், ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர்கள், உள்ளிட்ட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2026 - 19:54:52
Privacy-Data & cookie usage: