பெரம்பலூர்: கள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டு; 618 காளைகள், 290 வீரர்கள் கலந்து கொண்டர்; 61 பேர் காயம்!

schedule
2026-02-28 | 17:57h
update
2026-02-28 | 17:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Jallikattu in Kallapatti; 618 bulls, 290 athletes participated; 61 people injured!

பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் ஊராட்சியை சேர்ந்த கள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கலெக்டர் ந.மிருணாளினி, கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Advertisement

பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 618 காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டன. சேலம், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 290 காளைபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர் . இப்போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் அடக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் ஏராளமான சிறப்பு பரிசுகளை வழங்கினர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 2,000 க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் ஆங்காங்கே நீர், மோர் உள்ளிட்டவைகளை பார்வையாளர்களுக்கு வழங்கினர்.

46 மாடுபிடி வீரர்களும், 15 பார்வையாளர்களும் என 61 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிகழ்வில் வருவாய், மற்றும் காவல், கால்நடை மற்றும் கள்ளப்பட்டி ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர்கள், மருத்துவர்கள் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 22:57:11
Privacy-Data & cookie usage: