பெரம்பலூர்: கொளத்தூரில் ஜல்லிக்கட்டு; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்!

schedule
2025-05-02 | 18:36h
update
2025-05-02 | 18:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Jallikattu in Kolathur; Minister Sivashankar inaugurated and distributed prizes!

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமையிலும், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

Advertisement

பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரப்பட்ட 801 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 310 மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்து பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் அடக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் ஏராளமான சிறப்பு பரிசுகளை வழங்கினர்.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 2,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் ஆங்காங்கே குடிநீர், நீர்மோர் உள்ளிட்டவைகளை பார்வையாளர்களுக்கு வழங்கினார்கள். சுமார் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் செய்திருந்தார். இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 5 பேர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, உள்பட வருவாய், கால்நடை, காவல் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 18:02:44
Privacy-Data & cookie usage: