பெரம்பலூர்: நாளை முதல் அனைத்து தாலுகாகளிலும் ஜமாபந்தி; கலெக்டர் தகவல்!

schedule
2025-05-14 | 07:37h
update
2025-05-14 | 07:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Jamabandhi in all talukas from tomorrow; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி அனைத்து வட்டங்களிலும் 15.05.2025 முதல் 17.05.2025 வரை காலை 9.30 மணிக்கு வருவாய் தீர்வாயம் தொடங்கி நடைபெற உள்ளது.

கலெக்டர் தலைமையில், பெரம்பலூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி உள்வட்டம் வாரியாக முதலாம் நாள் (15.05.2025) அன்று குரும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட குரும்பலூர் (தெற்கு), குரும்பலூர் (வடக்கு), மேலப்புலியூர் (கிழக்கு), மேலப்புலியூர் (மேற்கு), லாடபுரம்(மேற்கு), லாடபுரம் (கிழக்கு), அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை, பொம்மனப்பாடி மற்றும் வேலூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

இரண்டாம் நாள் (16.05.2025) அன்று பெரம்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம், துறைமங்கலம், பெரம்பலூர் (தெற்கு), பெரம்பலூர் (வடக்கு), அரணாரை (வடக்கு), அரணாரை(தெற்கு), புதுநடுவலூர், சிறுவாச்சூர், நொச்சியம், கல்பாடி (வடக்கு), கல்பாடி (தெற்கு) மற்றும் அயிலூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

டிஆ.ர்.ஓ., தலைமையில், குன்னம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி உள்வட்டம் வாரியாக முதலாம் நாள் (15.05.2025) அன்று வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட திருமாந்துறை, பெண்ண கோணம்(வடக்கு), பெண்ணகோணம்(தெற்கு), வடக்கலூர், ஒகளூர்(மேற்கு), ஒகளூர்(கிழக்கு), சு. ஆடுதுறை, அத்தியூர்(வடக்கு), அத்தியூர்(தெற்கு), கிழுமத்தூர்(வடக்கு), கிழுமத்தூர்(தெற்கு), அகரம்சீகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர் மற்றும் வயலப்பாடி ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

Advertisement

இரண்டாம் நாள் (16.05.2025) அன்று கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட நன்னை (கிழக்கு), நன்னை(மேற்கு), பெருமத்தூர்(வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியர்(தெற்கு), எழுமூர்(மேற்கு), மழவராயநல்லூர், எழுமூர்(கிழக்கு), ஆண்டிக்குரும்பலூர், அசூர், சித்தளி(கிழக்கு), சித்தளி(மேற்கு), பேரளி (வடக்கு)பேரளி (தெற்கு) மற்றும் ஒதியம் ஆகிய கிராமங்களுக்கு நடைபெறஉள்ளது.

மூன்றாம் நாள்(17.05.2025) அன்று வரகூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி(மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம்(தெற்கு), காடூர் (வடக்கு), காடூர்(தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மணி (மேற்கு) மற்றும் பெரியவெண்மணி (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

சார் ஆட்சியர் தலைமையில், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) உள்வட்டம் வாரியாக முதலாம் நாள் (15.05.2025) அன்று வேப்பந்தட்டை குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட உடும்பியம், பூலாம்பாடி (கிழக்கு), பூலாம்பாடி(மேற்கு), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மேற்கு), தொண்டமாந்துறை(கிழக்கு), வெங்கலம்(மேற்கு), வெங்கலம் (கிழக்கு), வேப்பந்தட்டை(வடக்கு), வேப்பந்தட்டை(தெற்கு) மற்றும் வெண்பாவூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

இரண்டாம் நாள் (16.05.2025) அன்று பசும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட பெரிய வடகரை, நூத்தப்பூர் (தெற்கு), நூத்தப்பூர் (வடக்கு), பில்லங்குளம், கை.களத்தூர்(மேற்கு), கை.களத்தூர்(கிழக்கு), காரியானூர், பசும்பலூர்(வடக்கு), பசும்பலூர் (தெற்கு), பாண்டகபாடி, திருவாளந்துறை மற்றும் அகரம் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

மூன்றாம் நாள்(17.05.2025) அன்று வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூர், பிரம்மதேசம், மேட்டுப்பாளையம்(தெற்கு), மேட்டுப்பாளையம்(வடக்கு), பிம்பலூர், வி.களத்தூர், பேரையூர், எறையூர், தேவையூர் (வடக்கு), தேவையூர் (தெற்கு) மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) உள்வட்டம் வாரியாக முதலாம் நாள் (15.05.2025) அன்று செட்டிக்குளம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, து.களத்தூர், புது அம்மாபாளையம், கண்ணப்பாடி,தேனூர், இரூர், பாடாலூர் (மேற்கு) மற்றும் பாடாலூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது.

இரண்டாம் நாள் (16.05.2025) அன்று கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்டகொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர்(கிழக்கு), சிறுகன்பூர்(மேற்கு), வரகுபாடி, காரை(கிழக்கு), காரை(மேற்கு), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர்(மேற்கு) மற்றும் கொளத்தூர்(கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது. மூன்றாம் நாள் (17.05.2025) அன்று கூத்தூர் குறுவட்ட பகுதிக்குஉட்பட்ட தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரி பாளையம், ஆதனூர்(வடக்கு), ஆதனூர் (தெற்கு), கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு), சில்லக்குடி (வடக்கு) மற்றும் ஜமீன் ஆத்தூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது எனவும், பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.06.2026 - 04:13:10
Privacy-Data & cookie usage: