பெரம்பலூர்: ஜெயம் ரவி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை! 

schedule
2025-10-12 | 20:27h
update
2025-10-12 | 20:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Jayam Ravi’s fan club district secretary commits suicide by jumping off a bridge!

Advertisement

பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்த வாலிபர்

பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த, மக்கள் நீதி மையத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மகன் ஹரிஹரன் (25) என தெரிய வந்தது. ஹரிஹரன் (25). என்பதும், பிஇ படித்துள்ள இவர் பெரம்பலூர் மாவட்ட ஜெயம் ரவியின் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும்,, மக்கள் நீதி மையத்தின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார்.

இன்று இரவு போதையில் இருந்தவர் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 ரோடு மேம்பாலம் பகுதிக்கு சென்றவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.05.2026 - 19:19:26
Privacy-Data & cookie usage: