பெரம்பலூர்: வீரதீர துணிகர செயல்கள் புரிந்தோர்களுக்கு ஜீவன் ரக்க்ஷா பதக்க விருது; கலெக்டர் தகவல்!

schedule
2026-07-30 | 12:16h
update
2026-07-30 | 12:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Jeevan Raksha Padak awards for acts of exceptional courage and bravery; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய அரசின் சார்பாக பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் என்ற விருதும், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு உத்தம் ஜீவன் பதக்கம் என்ற விருதும், தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப்பாற்றுபவர் களுக்கு ஜீவன் ரக்க்ஷா பதக்கம் என்ற விருதும் வழங்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்கவிருதிற்கு https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் அல்லாது நேரிலோ அல்லது வேறு இணையதளங்களிலோ விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்புகள் இன்றி நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2026 மாலை 5.00 மணி. எனவே, ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சாதனைகள் புரிந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமாறும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.07.2026 - 12:28:06
Privacy-Data & cookie usage: