பெரம்பலூர்: JR One Kothari: தொழிற்சாலை விரிவாக்க கருத்து கேட்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்; நிலம், நீர், காற்று மாசு அதிகரித்து நோய்கள் வருவதாக தகவல்!

schedule
2026-02-12 | 17:38h
update
2026-02-12 | 17:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: JR One Kothari: Public protest against factory expansion consultation meeting; Land, water, and air pollution increasing, causing diseases!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள எறையூரில் JR One கோத்தாரி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் விரிவாக்கம் செய்வதற்காக அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில், பொதுமக்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்காமல், தகவல் கேள்விப்பட்டு வந்த பொதுமக்கள் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யக் கூடாது. இந்த தொழிற்சாலை இங்கு அமைத்து இயக்கி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் காற்று , நீர் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது அதனால் பொதுமக்களுக்கு முறையான அழைப்பு விடுத்த அனைத்து பொது மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும், என்று அங்கு வந்த பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு பெரும் ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய கோத்தாரி தொழிற்சாலை நிறுவனமோ, மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் துறையினரும் எவரும் பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். அதனால், மீண்டும் ஒருமுறை கிராம பொது மக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 19:20:23
Privacy-Data & cookie usage: