பெரம்பலூர்: JR One Kothari; தொழிலாளர்கள் 2வது நாளாக தொடரும் போராட்டம்!

schedule
2026-02-06 | 16:15h
update
2026-02-06 | 16:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: JR One Kothari; Workers’ protest continues for the second day!

பெரம்பலூர் அருகே எறையூர் கிராமத்தில், உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஜே ஆர் ஒன் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணிச்சுமை, ஊதிய உயர்வு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2வது நாளாக இன்று நுழைவு வாயிற்பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

போராட்டத்தின் இடையே நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்து பணிக்கு சென்ற தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு, வாகனங்களில் வீடு திரும்பிய நிலையில் அவர்களை வெளியே வரவிடாமல் வாயிலை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நின்றதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

JR One Kothari நிறுவனத்திற்காக நிலம் கையப்படுத்தப்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். அவர்களும் வாரவாரம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? என பல மனுக்களை கொடுத்தும், பல போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு முதலாளிகள் சம்பாதிக்கவே சிப்காட் போன்ற திட்டங்கள் பயன்படுகின்றன. சாமானிய மக்கள் தினக்கூலிக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 13:46:14
Privacy-Data & cookie usage: