பெரம்பலூர்: வரும் ஜீன் 14 கடைசி நாள்; பிரமாண்ட நயாகரா, சர்ரியல் நீர்வீழ்ச்சி கோடைக்கு இதமாக அருவியில் குளிக்க அலை மோதும் கூட்டம்!

schedule
2026-06-10 | 08:28h
update
2026-06-10 | 08:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: June 14 is the last day; crowds flock to bathe in the refreshing waters of the magnificent ‘Niagara’—a surreal waterfall—perfect for the summer season!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் பாலக்கரை அருகே சுமார் ரூ. 2 கோடி செலவில் டி.ஜே அம்யூஸ்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட செயற்கை நீர்வீழ்ச்சி கண்காட்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. சீனா, துபாய் போன்ற நாடுகளில் மக்கள் கண்டுகளித்த நீர்வீழ்ச்சிகள் நயகரா, சர்ரியல் போன்றவை இயற்கையை போன்று செயற்கையான முறையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டடு நடைபெற்று வருகிறது.

Advertisement

நயாகரா மற்றும் சர்ரியல் நீர்வீழ்ச்சிகள் பார்ப்போரை கண்கவரும் விதத்தில். தண்ணீர் விழுந்து ஆர்பாரிக்கும் சத்தம் மனதிற்கு ரிதமாகவும் இதமாகவும் உள்ளது. போட்டோ எடுத்துக் கொள்ளும் வகையிலும், அருவியில் இருந்து விழும் நீரை ரசிக்கும் வகையில் முன்னே சென்று பார்த்து வரும் வகையில் பாலம் அமைத்துள்ளனர். மற்றொரு நீர்வீழ்ச்சியான சர்ரியல் அருவியில் விழும் தண்ணீரில் கைதொட்டு ரசிப்பதுடன் குளிக்கவும் முடியும் என்பதால், இதில் அதிகளவில் குழந்தைகள், பெண்கள், குளித்து குதூகலத்துடன் ஆனந்தம் அடைகின்றனர். கோடைக்கு இதமாக அருவியில் இருந்து கொட்டும் தண்ணீரில் முகில் துகள்கள் ஜில்லென காற்றில் பரவி பார்வையாளர்களை பரவசத்தை ஏற்படுத்துகிறது.

மழைக் காலத்தில் அருவிகளை சென்று ரசிக்க முடியாமல் தவற விட்டவர்களுக்கு பெரம்பலூரில் இயற்கைக்கு இணையாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அருவிகள், பெண்கள் குழந்தைகளுக்கு ஓர் அரிய வாய்ப்பாகவும், அருவிகள் இரவு நேரத்தில் ரசனையை அதிகப்படுத்தும் வகையில் வண்ண வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்படுவதால் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.

மேலும், அருவிகளின் அருகே நடக்கும் பொருட்காட்சியில் பொழுதுபோக்கும் விதமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் மகிழும் விதமாகவும் டிராகன் ரயில், ஜெயின்ட் வீல் ராட்டினங்கள், பேய் வீடு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பள்ளி – கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் தனது குடும்பத்தினருடன் மாலை வேளையில் உலாவாக வந்து செல்கின்றனர். நாள் வரும் ஜூன் 14 ம்தேதி கடைசி நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை டிஜே அம்யூஸ்மெண்ட்ஸ் மேலாண் இயக்குனர் தினேஷ், மேலாளர்கள் நாசர். காதர், ரவி, மோகன்தாஸ், உதயகுமார் ஆகியோர் செய்து உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.06.2026 - 09:44:47
Privacy-Data & cookie usage: