Perambalur: K.N. Arun Nehru MP inaugurated 2 classrooms built at a cost of Rs. 43 lakhs from the Constituency Development Fund!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், சர்க்கரை ஆலை எறையூரில் உள்ள அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப்பள்ளியில், பெரம்பலூர் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கே.என்.அருண் நேரு எம்.பி திறந்து வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், ஒன்றிய திமுக பொறுப்பாளர் ந.ஜெகதீஸ்வரன், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த அக்ரி மாதவன், பொறியாளர் தமிழரசன் உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள், எறையூர் கிளை திமுக பிரமுகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன், அக்ரி மாதவன், பொறியாளர் தமிழரசன் உள்பட பலர் நேரு மேல்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடததக்கது.