பெரம்பலூர்: கருணாநிதி பிறந்த நாள்: திமுக அணிகள் சார்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை!

schedule
2025-06-14 | 08:12h
update
2025-06-14 | 08:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Karunanidhi’s birthday: Welfare assistance on behalf of DMK Wings; District in-charge V. Jagatheesan’s statement!

பெரம்பலூர் மாவட்டத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு ஜீன் மாதம் முழுவதும் ஒவ்வொரு திமுக அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 15.06.2025 காலை:- 10.00 மணிக்கு, இளைஞர் அணி! சார்பில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் வழங்குதல், மதியம்:- 12.00 மணிக்கு பொறியாளர் அணி சார்பில், துறைமங்கலம் ரோவர் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு, புத்தாடைகள் வழங்குதல்,

16.06.2025 அன்று 12.30 மணிக்கு, தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பெரம்பலூர் கவுதம புத்தர் அறக்கட்டளையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 20.06.2025 காலை 10.00 மணிக்கு மாணவர் அணி சார்பில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல்!

21.06.2025 காலை:- 10.00 மணிக்கு, சுற்றுச்சூழல் அணி சார்பில், பெரம்பலூர் – தண்ணீர் பந்தல் முதியோர் ஆசிரமத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 22.06.2025 காலை:- 10.00 மணிக்கு மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில், பெரம்பலூர் கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில் நடைபெறும் புகழரங்கம் நிகழ்ச்சியில் தோழர்.அருள்மொழி , பட்டிமன்ற பேச்சாளர் – மலர்விழி கலந்து கொள்கின்றனர்.

Advertisement

23.06.2025 காலை:- 10.00 மணிக்கு, தொழிலாளர் அணி சார்பில், சிறுகுடல் கிராமத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 23.06.2025 மதியம்:- 12.00 மணிக்கு, அயலக அணி சார்பில், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

24.06.2025 , காலை:- 10.00 மணிக்கு, விளையாட்டு மேம்பாட்டு அணி! பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணம் வழங்குதல் (ஒரு பள்ளிக்கு ரூ.2500 வீதம்) மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வழங்குதல், 25.06.2025. காலை:- 10.00 மணிக்கு, மீனவர் அணி சார்பில், வெள்ளுவாடி ஊராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், தூய்மைப் பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குதல்.

26.06.2025. காலை:- 10.00 மணிக்கு, இலக்கிய அணி சார்பில், வேப்பந்தட்டை அரசுக் கல்லாரியில் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு என் குரலில் திருக்குறள் உரைநூல் வழங்குதல், மதியம்:- 12.00 மணிக்கு வர்த்தக அணி சார்பில், பாடாலூர் பெரியார் குடில் பள்ளியில் உணவு மற்றும் மானவர்களுக்கு நோட்டு, புத்தம் வழங்குதல்,

27.06.2025 காலை:- 10.00 மணிக்கு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், இலுப்பைக்குடி கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்குதல், தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 12.00 மணிக்கு, சிறுபான்மையினர் அணி சார்பில் பெரம்பலூர், தீரன் நகர் வேலா கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,

28.06.2025, காலை:- 10.00 மணிக்கு தொண்டர் அணி சார்பில், கோனேரிப்பாளையம் முதுயுகம் முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 12.00 மணி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில், பெரம்பலூர், தீரன் நகர் வேலா கருணை இல்லத்தில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,

30.06.2025 காலை:- 08.00 மணிக்கு விவசாய அணி சார்பில், பெரம்பலூர் கவுதம புத்தர் அறக்கட்டளையில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 30.06.2025 காலை:- 10.00 மணிக்கு மருத்துவ அணி சார்பில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இரத்ததான முகாமும், மதியம்:- 12.00 மணிக்கு விவசாய தொழிலாளர் அணி சார்பில், பெரம்பலூர், தீரன் நகர் வேலா கருணை இல்லத்தில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மதியம்:- 01.00 மணி அளவில், நெசவாளர் அணி! செட்டிக்குளம் ஊனமுற்றோர் குழந்தைகளுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நடைபெற உள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளை மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் சிறப்பாக நடத்திட வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 21:52:52
Privacy-Data & cookie usage: