பெரம்பலூர்: திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி வாக்குகள் சேகரித்த குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர்!

schedule
2026-04-08 | 18:06h
update
2026-04-08 | 18:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Kunnam constituency DMK candidate Sivasankar canvassed for votes by highlighting the achievements of the DMK government.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளரான அமைச்சர் சிவசங்கர் உதயசூரியன் சின்னத்திற்கு தனது மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் சென்று வேப்பூர் ஒன்றியத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

வாக்குகள் சேகரித்த போது அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: குன்னம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குன்னத்தை பொறுத்தவரை விவசாயிகள் நிறைந்த தொகுதியாகும். குறிப்பாக, மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நிரம்பிய பகுதி. எனவே அவர்களுக்காக, ஏற்கெனவே அரசு மூலமாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ,மக்காச்சோளத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை எடுத்து வருகிறோம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதும் வகையில் குன்னம், செந்துறை, லப்பைக்குடிக்காடு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்தக் கட்டமாக திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான நிதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல, தமிழக அரசால் மகளிர், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும்,

Advertisement

திமுக ஆட்சியில் நல்ல பல திட்டங்களை குன்னம் தொகுதிக்கு வேப்பூர் ஒன்றியத்தில் நல்ல வளர்ச்சி திட்டப்பணிகளையும், கட்டமைப்பு பணிகளை முன்னெடுத்து உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, குன்னம் பஸ் டெப்போ, மாணவர்களுக்கு உதவித் தொகை, பயிற்சிகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அடுத்து ஆட்சியிலும் சிறந்த பல தேர்தல் வாக்குறுதிகளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார். மீண்டும், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதுடன் குன்னம் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு மீண்டும் வாய்ப்பளியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள, கொத்தவாசல், புதுகுடிசை, சின்னவெண்மணி, பெரியவெண்மணி, கொளப்பாடி, துணிஞ்சபாடி புதூர், நல்லறிக்கை, காடூர், புதுவேட்டக்குடி, வரகூர், அந்தூர், கிளியூர், குன்னம், அசூர், ஆய்குடி, மழவராயநல்லூர், காருகுடி, எழுமூர், சித்தளி, பீல்வாடி,பேரளி, மருவத்தூர், பனங்கூர், ஒதியம், மூங்கில்பாடி, பெரியம்மாபாளையம், கரம்பியம் ஆகிய பகுதிகளில் இன்று திமுக கூட்டணி கட்சிகளுடன் வாக்குகள் சேகரித்தார். திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2026 - 21:19:19
Privacy-Data & cookie usage: